ஆடை ஆர்டர் நழுவும்! இனியும், நூல் விலை உயர்ந்தால்... பின்னலாடை துறையினர் பரிதவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 பிப்
2021
04:35
பதிவு செய்த நாள்
பிப் 25,2021 00:50

திருப்பூர் : நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை, இதற்கு மேலும் உயர்த்த கூடாது என, திருப்பூர் பின்னலாடை துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உட்பட தமிழகம் முழுதும் உள்ள நுாற்பாலைகளிடமிருந்து, மூலப்பொருளான ஒசைரி நுால் கொள்முதல் செய்கின்றன. ஏற்றுமதி வாய்ப்புகள், பஞ்சு விலை உயர்வு காரணமாக, நுாற்பாலைகள், கடந்த சில மாதங்களாக, நுால் விலையை உயர்த்தி வருகின்றன.மாதம்தோறும், கிலோவுக்கு, 10 முதல், 15 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இதுவரை, கிலோவுக்கு, 50 ரூபாய் உயர்ந்துள்ளது. நுால் விலை அதிகரித்துவருவது, ஆடை உற்பத்தி துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.



வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து புதிய ஆர்டர்களை பெறுவதிலும்; பெறப்பட்ட ஆர்டர்களுக்கு, ஆடை தயாரிப்பதிலும், சிக்கல் நீடிக்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், நுாற்பாலைகள், நுால் விலையை நிர்ணயம் செய்கின்றன. இம்மாதம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வரும் மார்ச் 1ல், நுால் விலை மேலும் உயர்த்தப்பட்டு விடுமோ என்கிற அச்சம், ஆடை உற்பத்தி துறையினரை சூழ்ந்துள்ளது.பின்னலாடை துறையினர் கூறியதாவது:ஒசைரி நுால் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால், ஆயத்த ஆடைகளுக்கு விலை நிர்ணயிப்பதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன;



உற்பத்தி செலவினம் அதிகரிப்புக்கு ஏற்ப, வெளிநாட்டு வர்த்தகரிடம் ஆடை விலையை உயர்த்தி பெறுவது சவாலானதாக உள்ளது. ஆர்டர்கள் கைநழுவி, போட்டி நாடுகளுக்கு நகரும் நிலை உருவாகியுள்ளது.தமிழக நுாற்பாலைகள், இனினும், நுால் விலையை உயர்த்தி, ஆடை உற்பத்தி துறையினருக்கு அதிச்சி கொடுக்க கூடாது; ஆடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து துறைகளின் நலனை கருத்தில் கொண்டு, நுால் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். புக்கிங் செய்யும் நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்புக்கு தேவையான அளவு நுாலை, தட்டுப்பாடு இன்றி வழங்கவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202106:30:36 IST Report Abuse
ஆப்பு பிரதமர் சொல்ற மாதிரி இது வெளிநாட்டு சதி. சவூதி அரேபியா, இரான், இராக் போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் விலையை ஏத்தி இந்தியாவை கவுக்க சதி செய்கின்றன. நம்பலியா... இதுக்கெல்லாம் நேருதான் காரணம்.
Rate this:
Cancel
25-பிப்-202106:28:14 IST Report Abuse
ஆப்பு வரப்புயர.... எல்லாம் உயரும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் எல்லா விலையும் தானே உயரும். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி நூற்பாலைகள் மீது குறை சொல்ல வந்துட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X