அரிவாள் வெட்டு மேலும் ஒருவர் கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
அரிவாள் வெட்டு மேலும் ஒருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
00:54

திருப்பூர் : திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டை சேர்ந்தவர் ஜேம்ஸ், 32; கட்டட தொழிலாளி. பூலுவபட்டி, செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முகமது ரியாஸ்; டிரைவர்.



ஜேம்ஸ் தனது நண்பர்களுடன் முகமது ரியாஸ் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அவரது தந்தை முகமது முஸ்தபா, தாய் சகிதா பானுவை அரிவாளால் வெட்டினர்.கொலை முயற்சி சம்பவத்தில், வினோத், 23, கார்த்தி, 24, சரவணகுமார், 18 மற்றும் செல்வகுமார், 24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள ஜேம்ஸ் உட்பட சிலரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், பட்டுகோட்டையை சேர்ந்த ராஜேஷ், 25 என்பவரை திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். ஜேம்சை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X