எதிர்பார்ப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
00:58

திருப்பூர் : பிரதமர் மோடியின் கோவை வருகை, திருப்பூரில் அரசியல் கட்சியினர் மற்றும் தொழில்துறையினரிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் மோடி, இன்று, கோவை வருகிறார்.



அரசு விழா மற்றும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், பா.ஜ.,வுக்கென 'ஓட்டு வங்கி' உள்ளது. மோடியின் வருகை, மாவட்ட பா.ஜ.,வினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ., இளைஞரணியினர், இதற்காகவே, தனி 'டிசர்ட்' தயாரித்து, கூட்டத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மகளிரணியினர் வாகன பேரணி நடத்தியுள்ளனர். மாவட்ட பா.ஜ.,வும், மோடி கூட்டத்துக்கு அதிகளவில் தொண்டர்களை திரட்டிச் செல்வதற்கான முனைப்பு காட்டியது.



மாவட்டத்தில், குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளையாவது, கூட்டணிப் பங்கீட்டில், பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பா.ஜ.,வினர் உள்ளனர்.முதல்வர் பழனிசாமி, திருப்பூரில் முதற்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார். அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரிடம், மோடியின் வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.எதிரணியில் உள்ள தி.மு.க.,வில் அதன் தலைவர் ஸ்டாலின், மகளிரணி தலைவர் கனிமொழி, காங்.,கில், தேசிய முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர், திருப்பூருக்குப் பிரசாரத்துக்கு வந்து சென்றுள்ளனர். மத்திய பா.ஜ., அரசு மீது, இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



இதற்கான பதிலடி, கோவை கூட்டத்தில், பிரதமர் மோடியிடம் இருந்து இருக்கும் என்ற நம்பிக்கை, பா.ஜ.,வினரிடம் உள்ளது.தொழில்துறைஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு, திருப்பூர் பின்னலாடை தொழில்துறை மீண்டு கொண்டிருக்கிறது. பின்னலாடை தொழில்துறை வேகம் காட்டும் அளவு, விசைத்தறி உள்ளிட்ட தொழில்துறைகள், இன்னும், 'சுறுசுறுப்பு' காட்டவில்லை. நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பின்னலாடை துறையினர் முன்வைத்துள்ளனர். கோவையில் இருந்து திருப்பூருக்கு மெட்ரோ ரயில் விடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.



விசைத்தறியாளர்கள், தாங்கள் வாங்கிய வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில், வங்கி கடனுதவிகள், தொழில்துறையினருக்கு உதவிகரமாக இருந்தன. தொழில்துறையினருக்கு, மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியமானதாக இருக்கிறது.ஊரடங்குக்கு முன், திருப்பூர் பின்னலாடை துறை நிர்வாகிகள் உட்பட, ஜவுளித்துறை நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து, தொழில்துறை பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். எனவே, தொழில்துறையின் பிரச்னைகளை மோடி நன்கு அறிந்து வைத்துள்ளார்.



அரசு நிகழ்ச்சியிலும், பொதுக்கூட்டத்திலும், தொழில்துறை பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பான அறிவிப்புகளையும், திருப்பூருக்கான புதிய வாக்குறுதிகளையும் பிரதமர் மோடி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடம் மேலோங்கியுள்ளது.''மகிழ்வான தருணங்களில் கைகுலுக்கும் ஐந்து விரல்களாகவும், கஷ்டமான நேரங்களில் கண்ணீரைத் துடைக்கும் ஒற்றை விரலாகவும் மத்திய அரசு இருக்கும்'' என்ற நம்பிக்கையுடன், பிரதமர் மோடியின் வருகையை, திருப்பூர் தொழில்துறை எதிர்நோக்கியிருக்கிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X