அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
01:19

கோவை : போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.



அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., என, எட்டு தொழிற்சங்கங்களை கொண்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலையில், இந்த வேலை நிறுத்தம் காரணமாக, மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்புகளை தவிர்க்க, ஆளும் கட்சி தொழிற்சங்கத்தினரை கொண்டு, முடிந்தவரை பஸ்களை இயக்க, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் வகையில், ஒவ்வொரு டிப்போவுக்கும், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள், இருக்கும் பணியாளர்களை கொண்டு பஸ்களை இயக்க, தேவையான நடவடிக்கைகள் எடுப்பர்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X