டாஸ்மாக் அலுவலகத்தில் அதிகாலையில் தீ விபத்து | சென்னை செய்திகள் | Dinamalar
டாஸ்மாக் அலுவலகத்தில் அதிகாலையில் தீ விபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
01:23

அம்பத்துார்; அம்பத்துார் தொழிற்பேட்டையில், தமிழ்நாடு அரசு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும், சென்னை தெற்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது.நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், இந்த அலுவலகத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயில், அங்கிருந்த, 10 கம்ப்யூட்டர்கள், டாஸ்மாக் கடை ஊழியர்களின் சம்பளம், மதுபான விற்பனை மற்றும் வரவு, செலவு உள்ளிட்ட கணக்கு விபரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள், முழுதுமாக எரிந்து சாம்பலாயின.தகவல் அறிந்த, அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்தினர், 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X