ஊட்டி : புலிகள் காப்பக மேலாண்மை பணிகள் குறித்தான, ஆய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், தென் மண்டல அளவில், 14 புலிகள் காப்பக கள இயங்குனர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இந்த, ஆய்வு கூட்டத்துக்கு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் சத்தியபிரகாஷ் யாதவ் தலைமை வகித்தார்.புலிகள் காப்பகங்களில் மேற்கொள்ளப்பட்ட மேலாண்மை பணிகள் குறித்து, கர்நாடக மாநில புலிகள் காப்பக, கள இயக்குனர் மரியகிறிஸ்து ராஜூ மற்றும் பிற மாநில அதிகாரிகள் விளக்கினர். இன்று முதுமலை புலிகள் காப்பகத்தில் களப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.