கோவை, : நவஇந்தியா, இந்துஸ்தான் கலை கல்லுாரியில், வணிகவியல் துறை சார்பில், நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படையின் காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி ஐ.பி.எஸ்., பேசுகையில், ''ஒவ்வொருவரும் நுகர்வோர் உரிமையை அறிந்துகொள்ள வேண்டும். மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். சிறப்பு விருந்தினர் 'ஆர்கனைசேஷனல் பிகேவியர் டெக்ஸ் அண்ட் கேஸஸ்' என்ற புத்தகத்தை வெளியிட, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பெற்றுக்கொண்டார்.கல்லுாரி செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி, வணிகவியல் துறை தலைவர் நிர்மலா மற்றும் அனைத்து துறை பேராசியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.