கிரஷர் புழுதியை கட்டுப்படுத்த பம்மல் மக்கள் கோரிக்கை | சென்னை செய்திகள் | Dinamalar
கிரஷர் புழுதியை கட்டுப்படுத்த பம்மல் மக்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
01:26

பம்மல்- பம்மல் -- திருநீர்மலை சாலையில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும், 'கிரஷர்' புழுதியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பம்மல், கிருஷ்ணா நகர் பகுதியில், 10க்கும் மேற்பட்ட 'கிரஷர்'கள் இயங்குகின்றன. பல 'கிரஷர்'கள் போதிய பாதுகாப்பின்றி, விதிமுறையை மீறி இயங்குவதாக கூறப்படுகிறது. 'கிரஷர்'களை இயக்கும் போது, வெளிவரும் புழுதி, பம்மல் -- திருநீர்மலை சாலையையும், ஒட்டியுள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்து, அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சலையும், மூச்சு திணறலையும் ஏற்படுத்துகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாளாக உள்ள இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X