குண்டாறு திட்டத்தை எதிர்ப்பதா? விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
குண்டாறு திட்டத்தை எதிர்ப்பதா? விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
01:29

திருப்பூர் : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவதாக கர்நாடக முதல்வர் கூறியுள்ளதற்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது:காவிரி, வைகை, குண்டாறு, தெற்கு வெள்ளாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில், 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கரூர், திருச்சி மாவட்டங்கள் பெரிதும் பயனடையும். திட்டத்தை தமிழக அரசு துவங்கியதற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும் என கர்நாடக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் தெரிவித்துள்ளனர்.



இது தவறான கண்ணோட்டம்.அணையில் உடைப்பு ஏற்படும் நிலையில் தான் காவிரியில் நீர் திறக்கப்படுகிறது. தமிழகத்துக்கு உரிய நீர் கிடைப்பதில்லை. இது முறையாக பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உபரி நீர் தேக்கி வைக்க முடியாத நிலையில், கடலில் சென்று கலக்கும் நீரை தேக்கி வைத்து பயன்படுத்துவதுதான் குண்டாறு திட்டத்தின் நோக்கம். இதை கர்நாடகம் எதிர்ப்பது கண்டனத்துக்குரியது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X