தரமற்ற தின்பண்டம் விற்பனை புறநகர் பகுதிகளில் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
01:30

குரோம்பேட்டை; சென்னை புறநகர் பகுதிகளில், சுத்தமில்லாத எண்ணெயில், தின்பண்டங்கள் தயாரித்து விற்கப்படுவது, அதிகரித்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், சாலையோர உணவகங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கடைகளில், விற்பனை செய்யப்படும் பஜ்ஜி, போண்டா, 'சிக்கன் 65', சிக்கன் மற்றும் மட்டன் பக்கோடா ஆகியவற்றை, மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.காலை, மாலை நேரங்களில், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் இந்த பலகாரங்கள், ஏற்கனவே, பலமுறை பயன்படுத்திய, சுகாதாரமற்ற எண்ணெயில் தயாரிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. பல கடைகளில், 'ஈ-'க்கள் மொய்க்கும் நிலையில், தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. சாலையில் செல்லும் வாகனங்களால் எழும் துாசி, புகை போன்ற மாசுக்கள், இவற்றில் படியும் வகையில், திறந்த வெளியில் விற்பனை செய்யப்படுகின்றன. மூடப்படாத தின்பண்டங்கள், நிறம் மாறிய எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், கலப்பட பொருட்களில் தயாராகும் பலகாரங்கள் போன்றவற்றால், அதை சாப்பிடுவோருக்கு, உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X