திரும்பத் திரும்ப நூல் விலை பிரச்னை; திக்கித் திணறும் திருப்பூர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
01:44

திருப்பூரில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடைகள் தயாராகின்றன. இவற்றில், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடக்கிறது; மீதமுள்ள, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள், உள்நாட்டுச் சந்தையில் விற்பனையாகின்றன. இந்த உள்நாட்டு வியாபார மதிப்பு, கொரோனா எதிரொலியாக 15 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.



100 சதவீத உற்பத்தி இல்லைஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும், 'கொரோனா' தாக்கத்தால் ஆயத்த ஆடைகளுக்கான தேவை அதிகமான நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் விற்பனை அதிகரித்ததால், திருப்பூர்ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு,'ஆர்டர்'கள் அதிகரித்துள்ளன. இதனால், ஒசைரி நுால் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நுாற்பாலைகள் இன்னும் முழு வீச்சில் இயங்கவில்லை. ஊரடங்கு காரணமாக, இந்த நிதியாண்டு துவங்கியதில் இருந்தே மூடப்பட்டுக் கிடந்த மில்கள், கடந்த ஆகஸ்ட்டுக்குப் பின்னர் தான், முழு உற்பத்தியைத் துவக்கின.



படிப்படியாக உற்பத்தி அளவு அதிகரித்தாலும் இன்று வரையிலும் ஆள் பற்றாக்குறை காரணமாக, 100 சதவீத உற்பத்தியை எட்டிப்பிடிக்கமுடியவில்லை. துரதிருஷ்டவசமாக பருத்தி அறுவடைக்காலமான நவம்பரில் வெளுத்து வாங்கிய மழையால், இந்தியாவில் பஞ்சு தரம் பாதிப்புக்குள்ளாகி, மில்களின் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளதாக, மில் உரிமை யாளர்கள் கூறுகின்றனர்.நுால் பற்றாக்குறைதிருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கான ஒசைரி நுால்களின் தேவை அதிகரித்திருக்கிறது.



உண்மை நிலவரத்தைச் சொல்வதானால், வடமாநிலங்களில் உள்ள மில்களை ஒப்பிடுகையில் தமிழகத்திலுள்ள மில்களின் உற்பத்தித்திறனும், லாபமும் குறைவு. அதற்குக் காரணம், இங்குள்ள கடன் கலாசாரம். திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு 90லிருந்து 100 நாட்கள் வரை கடன் கொடுத்துத்தான், மில்கள் நுால்களை சப்ளை செய்து கொண்டிருந்தன.இதனால் பல ஒசைரி மில்கள், வேறு நுால்கள் தயாரிப்புக்கும் மாறியிருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் ஒசைரி நுால் உற்பத்தி செய்யும் மில்கள் எதுவும் விரிவாக்கம் செய்யப்படவுமில்லை; புதிய மில்களும் வரவில்லை.



ஆனாலும் சப்ளையில் எந்தத் தொய்வுமின்றி இருந்ததால், எந்த பனியன் நிறுவனமும் நுால்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதேயில்லை.இப்போது நுாலின் தேவை ஒரே நேரத்தில் அதிகமாகி இருப்பதாலும், பணம் கொடுத்து பலரும் நுாலை வாங்கத் தயாராக இருப்பதாலும் பனியன் நிறுவனங்களுக்கு நுால் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சமீபகாலமாக கான்பூர், லுாதியானா, டில்லி போன்ற நகரங்களில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் அதிகரித்து வருவதால், வடமாநிலங்களில் உள்ள மில்கள், திருப்பூருக்கு நுால்களை அனுப்புவதில்லை.இதுபோன்ற காரணங்களால், தற்போது திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு தேவைக்கேற்ற அளவில் நுால் கிடைப்பதில்லை.



இதன் எதிரொலியாக, நுால் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வைக்கும் அளவுக்கு, சூழ்நிலை உருவாகியுள்ளது.நெருக்கடிக்கு தீர்வு என்ன?திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:கொரோனா பாதிப்புகளிலிருந்து திருப்பூர் பின்னலாடை துறை, மீண்டெழுந்து வருகிறது. இச்சூழலில், ஒசைரி நுால் விலை உயர்ந்துவருவதால், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து, ஆர்டர் பெறுவதில் சிக்கலாகிறது. நுால் விலை மட்டுமல்ல, நிட்டிங், டையிங் என, உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப்ஒர்க் கட்டணங்கள்; மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தற்காலிகச் சலுகை வழங்கி, நெருக்கடி நிலையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.



கோவை சைமா, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் (டாஸ்மா), ஐ.டி.எப்., (இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்) உள்ளிட்ட நுாற்பாலை சார்ந்த அனைத்து சங்கங்களுக்கும், குறுகிய காலத்தில் நுால் விலையை உயர்த்தக்கூடாது; ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தட்டுப்பாடு இன்றி நுால் வழங்கவேண்டும் என கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.உற்பத்தி செலவினங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப, வெளிநாட்டு வர்த்தகரிடம் ஆடைகளுக்கு விலை உயர்வு பெற, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நுாற்பாலை சங்கங்களுடன் பேச்சு நடத்த சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.



நுால் விலை உயர்வை சுட்டிக்காட்டி ஆடைகளுக்கும் விலையை உயர்த்தித்தருமாறு வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு தகவல் அனுப்புமாறு சம்பந்தப்பட்ட தொழில் அமைப்பு களுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.நுால் ஏற்றுமதியை தடை செய்வது, தேவை அதிகமாகும்போது விலையை உயர்த்தக்கூடாது என்பதெல்லாம் இன்றைய வர்த்தகச் சூழலில் சாத்தியமில்லாதவை.



உலகளவில் ஆயத்தஆடைகளின் தேவை அதிகரித்துள்ளதால், காலம்காலமாக கடைபிடிக்கும் நடைமுறைகளை மாற்றிக்கொண்டு, சந்தையின் போக்கு மற்றும் உற்பத்திச் செலவைக் கணித்து, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் விலையைக் கேட்டுப் பெறுவது, அமெரிக்காவுக்கான ஏற்றுமதிக்குரிய புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவது போன்ற மாற்றங்களுக்கு, திருப்பூர் தொழில்துறை தயாராக வேண்டியது காலத்தின் கட்டாயம்.திட்டமிடல் அவசியம்'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் (ஐ.டி.எப்.,)' கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:அனைத்து மூலப்பொருட்களின் விலையும் 30லிருந்து 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.



பருத்தி, விஸ்கோஸ் எனப்படும் செயற்கை நுாலிழை, பாலிஸ்டர், ஸ்பான்டெக்ஸ் போன்ற அனைத்து மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.கடந்த நவம்பரில் பருத்தி பேல் விலை, 38 ஆயிரம் ரூபாயாக இருந்தது; இப்போது, 47 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால், நுாலின் விலையையும் ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் மில்கள் இருக்கின்றன. இந்த விலையேற்றம் தவிர்க்கவே முடியாதது. இன்னும் சொல்வதானால், கடந்த மூன்று மாதங்களாக, பிற மாநில மில்களைக் காட்டிலும் கிலோவுக்கு, 15 ரூபாய் குறைவாகவே இங்கு விற்கப்பட்டது.பஞ்சு வர்த்தகத்தின் விலை போக்கைப் பொறுத்தே வரும் மாதங்களில் நுாலின் விலையும் தீர்மானிக்கப்படும்.



மிக முக்கியமாக, இந்தியாவை விட, ஆயத்த ஆடை உற்பத்தியில் நம்முடன் போட்டிபோடும் வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில், பஞ்சு மற்றும் நூலின் விலை, 10 சதவீதம் அதிகமாகவே உள்ளது. அதை உணர்ந்து, ஜவுளித்துறையின் அனைத்துப் பிரிவினரும் இணைந்து, எதிர்காலத்துக்கான தேவைகளைத் திட்டமிடுவதே இன்றைய தேவை.இவ்வாறு, பிரபு தாமோதரன் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202121:00:56 IST Report Abuse
ஆப்பு ஏழு ஜவுளி பூங்காக்கள் வருதாம். வந்தப்புறம் போய் பறிச்சுக்கோங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X