அ.ம.மு.க., மாநில செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு | செய்திகள் | Dinamalar
அ.ம.மு.க., மாநில செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
02:24

பாகூர் - அ.ம.மு.க., மாநில செயலாளரின் கார் கண்ணாடியை உடைத்தவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி அ.ம.மு.க., மாநில செயலாளர் வேல்முருகன். இவருக்கு சொந்தமான பிஒய் 01 சிபி 1819 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா கார், சோரியாங்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கடந்த 14ம் தேதி நள்ளிரவு, முகத்தை துணியால் மூடியபடி வந்த இரண்டு பேர், காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் உதயரசன் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X