திருப்பம்; அணி மாற காத்திருக்கும் அரசியல் கட்சிகள்பிரதான கூட்டணிகளில் தீரவில்லை குழப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
02:31

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் பா.ஜ., - அ.தி.மு.க., இடையிலான கூட்டணி உறுதியாகி விட்டது. இந்த கூட்டணியில் என்.ஆர்.காங்., கட்சியும் இடம் பெற்றுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் அறிவித்தார்.



இருந்தபோதும், தொகுதி பங்கீடு, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பிரச்னைகளால் கூட்டணியில் நீடிப்பது குறித்து ரங்கசாமி யோசனையில் ஆழ்ந்துள்ளார். 20 தொகுதிகளில் போட்டியிட என்.ஆர்.காங்., விரும்புகிறது. இதில், 18 அல்லது 16 தொகுதிகள் ஒதுக்கினால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் உள்ளார்.பா.ஜ.,வின் புதிய 'பார்முலா'பா.ஜ., தரப்பு 'புதிய பார்முலா'வை முன் வைத்துள்ளது. அதாவது, என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.,வும் தலா 12 தொகுதிகளில் போட்டியிடுவது, அ.தி.மு.க.,வுக்கு 6 தொகுதிகளை தருவது என்பது பா.ஜ.,வின் திட்டமாகும். இதனால், 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பதுபோல பா.ஜ., - என்.ஆர்.காங்., இடையே இழுபறி நீடிக்கிறது.முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை ஏற்றுக் கொள்வதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், தடாலடி நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜ.,வில் இணைத்துள்ளதும், நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களின் முதல்வர் கோஷமும் ரங்கசாமிக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சமும் அவருக்கு உள்ளது. எனவே, பா.ஜ.,வுடன் சுமூக உடன்பாடு ஏற்படாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.அன்பழகனின் 'பிளான்'பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க.,வின் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனுக்கு வேறு மாதிரியான பிரச்னை. உப்பளம் தொகுதியில் தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.,வாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.உப்பளம் தொகுதியில் முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். எனவே, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் தனது வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் அவருக்கு உள்ளது. இதனால் தனது தம்பி பாஸ்கருடன் முகாம் மாறவும் வாய்ப்புள்ளது.தி.மு.க.,வின் 'திடுக்' திட்டம்எதிர்க்கட்சி கூட்டணியை பொறுத்தவரை, காங்கிரசுக்கும், தி.மு.க.,வுக்கும் எட்டாம் பொருத்தமாகவே உள்ளது. ஏற்கனவே, காங்., கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும் என தி.மு.க.,வினர் குரல் எழுப்பி, காங்கிரசாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர்.



மேலும், என்.ஆர்.காங்., கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் திட்டத்துடன் அக்கட்சி தலைவருடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். ஸ்டாலினுடன் ராகுல் நடத்திய பேச்சுவார்த்தையால், கூட்டணி சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன.இருந்தபோதும், தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்படும்பட்சத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறி, என்.ஆர்.காங்., கட்சியுடன் கைகோர்ப்பதற்கு தி.மு.க.,வினர் நேரம் பார்த்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.மூவர் அணியின் முடிவு என்ன?முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான நேரு, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் என்.ஆர்.காங்., கட்சியில்தான் இருக்கின்றனர். இருந்தபோதும், தாங்கள் விரும்பும் கூட்டணியில் என்.ஆர்.காங்., இடம் பெறாத சூழல் ஏற்பட்டாலும், தங்களுக்கு 'சீட்' கிடைக்காத பட்சத்திலும், தனித்து களம் இறங்க தயார் நிலையில் உள்ளனர்.இதற்காக, மக்கள் ஜனநாயக பேரவை என்ற பெயரில் கட்சி துவக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுடனும் மூவரும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். தற்போது அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகளை உற்றுநோக்கி வரும் மூவர் அணியினர் எடுக்கும் முடிவுகள், 3 அல்லது 4 தொகுதிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X