'அவுட்சோர்சிங்' ஊழியர்களுக்கு எதிராக அறிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
02:34

புதுச்சேரி - சுற்றுலா பாதுகாவலர்களை பி.டி.டி.சி., நிறுவனத்தில் இருந்து வெளியேற்றி, நிரந்தர ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக, நீர்விளையாட்டு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து சங்க பொதுச்செயலாளர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி பி.டி.டி.சி., நிர்வாகத்தில் 5 உணவகங்கள், ஒரு பெரிய படகு குழாம் இயங்குகிறது. 250 நிரந்தர ஊழியர்கள் உள்ளனர். இந்நிலையில், தேவையில்லாமல் தனியார் சொசைட்டி ஆட்கள், 100 பேரை பி.டி.டி.சி.,யில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ஊதியமாக ரூ. 24 கோடிக்கு மேல் வழங்கியதால், நிரந்தர ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அத்துடன் வங்கிக்கடன், வருங்கால வைப்பு நிதி, எல்.ஐ.சி., போன்ற சம்பள பிடித்தங்களை செலுத்தாமல், நிதி தள்ளாட்டத்தில் நிர்வாகம் உள்ளது. சம்பளம் இல்லாமல் பி.டி.டி.சி., ஊழியர்கள் குடும்ப செலவினை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பளம் வழங்காததால், கடந்த 10 தினங்களுக்கு முன் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.எனவே, பி.டி.டி.சி., நிறுவனத்தில், 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாற்றும் 100 சுற்றுலா பாதுகாவலர் களை வெளியேற்றிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X