மாணவர் தற்கொலை | செய்திகள் | Dinamalar
மாணவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
02:35

புதுச்சேரி; பள்ளி மாணவன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.தேங்காய்திட்டு அருட்பெருஞ்ஜோதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 51 .மீன்பிடி வலை விற்பனை செய்து வருகிறார். இவரது மகன்கள் திருக்காமேஸ்வரன், ஆகாஷ்வரன்,16. பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். சகோதரர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர்.பிற்பகல் 2.30 மணியளவில், படுக்கை அறைக்கு சென்ற ஆகாஷ்வரன் அதன் பிறகு வெளியே வரவில்லை. திருக்காமேஸ்வரன் சென்று பார்த்தபோது, ஆகாஷ்வரன் துாக்கில் தொங்குவதை கண்டு அலறினார். அக்கம்பக்கத்தினர் ஆகாஷ்வரனை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பொருளாதார ரீதியாக துவண்டுபோன பெற்றோர் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஆகாஷ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக, முதலியார்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X