புதுச்சேரி; தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ராஜ்பவன் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.செஞ்சி சாலை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கிழக்கு மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.முன்னாள் தொகுதி செயலாளர் அன்பழகன், மாநில துணை செயலாளர் உமாமோகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராமலிங்கம், ராஜ்பவன் தொகுதி செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.730 ஏழை எளிய மக்களுக்கு சேலை, வேட்டிகள், அன்னதானம், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.தொகுதி அவைத் தலைவர் சுரேஷ்குமரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்முருகன், இணை செயலாளர் சாவித்ரி, அய்யப்பன், பொருளாளர் செல்வம், ஆலியப்பன், விநாயகம், டெய்லி கிளாரா, உதயகுமார், வார்டு நிர்வாகிகள் அரிகரன், மூர்த்தி, கிருஷ்ணன், பட்டாபி, கார்த்திகேயன், கோவிந்தசாமி, பாலசுப்ரமணியன், தேசிங்கு, உமா, மோகனசுந்தரம், ஆறுமுகம், கன்னியப்பன், பிச்சைராஜன், காமராஜ், கோபு, முரளி, ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், கிழக்கு மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் பேசுகையில், 'புதுச்சேரியில் ஆட்சி செய்த காங்., அரசு, எந்த நன்மையும் செய்யவில்லை. ஏ.எப்.டி. மில்லை மூடியது, கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் வஞ்சித்தது. ரேஷன் கடையில் அரிசியை வழங்காமல் நிறுத்தியது. புதிதாக ஒருவருக்கு கூட முதியோர், விதவை பென்ஷன் வழங்கவில்லை' என்றார்.