புதுச்சேரி- பிரதமர் பங்கேற்கும் விழா நடைபெறும் ஜிப்மர் கலையரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் ஆய்வு செய்தார் .புதுச்சேரிக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ஜிப்மர் கலையரங்கில் 3,023 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.அதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை, புதுச்சேரி போலீசார், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து செய்துள்ளனர்.விழா நடக்கும் ஜிப்மர் கலையரங்கை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலிடம் நிகழ்ச்சி நிரல் விபரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது கவர்னரின் சிறப்பு செயலர் சுந்தரேசன், மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் உடனிருந்தனர்.