ஜெலட்டின் பறிமுதல்; 6 போலீசாருக்கு பாராட்டு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ஜெலட்டின் பறிமுதல்; 6 போலீசாருக்கு பாராட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
07:06

திருவாடானை : ஜெலட்டின் பறிமுதல், கோர்ட் வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசார்களுக்கு ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.



கடலில் மீனவர்கள் வெடி வைத்து மீன்பிடித்து வருவதை தடுக்கும் வகையில் தொண்டி தனிப்பிரிவு எஸ்.ஐ. முருகானந்தம், திருப்பாலைக்குடி தனிப்பிரிவு போலீஸ் ராஜா ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 100 ஜெலட்டின் குச்சிகளையும் அதை வெடிக்க பயன்படுத்தப்படும் வயர்களையும் பறிமுதல் செய்தனர்.இதில் சிறப்பாக பணியாற்றிய இருவருக்கும் எஸ்.பி. கார்த்திக்பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.



இதேபோல் திருவாடானை, ராமநாதபுரம் கோர்ட்டுகளில் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும், வழக்கு விசாரணையின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக காளீஸ்வரன் (ஆர்.எஸ்.மங்கலம்), பவர்சிங் (திருப்பாலைக்குடி) ஆகியோருக்கும், தொண்டி போலீஸ் ஸ்டேஷன் வழக்குகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து சிறப்பாக பணியாற்றியதற்காக பிரகாஷ், ஜெயக்குமார் ஆகிய போலீசார்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X