குறிக்கோளுடன் தொடர் முயற்சி தேவை; மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
குறிக்கோளுடன் தொடர் முயற்சி தேவை; மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
07:10

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான நேற்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்புதின விழா நடந்தது.



மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் இளைஞர் நீதிக்குழுமம் தலைவர், மாஜிஸ்திரேட் ஜெனித்தா முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பேசியதாவது:படிக்கும்போதே மாணவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கனவு மட்டும்கண்டால் போதாது, வாழ்க்கையில் சவால் இருக்கத்தான் செய்யும்.



குறிக்கோளை அடைய தொடர் முயற்சி அவசியம். சிறுவயது முதல்நற்பண்புகளை வளர்த்து நல்ல மனிதராக வாழ வேண்டும்,' என்றார்.



பெண்குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தனர். மாவட்டத்தில் பெண்குழந்தைகள் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கான போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, சமூகநல அலுவலர் ஜெயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.



இதேப்போல தேவிபட்டினம் அன்னை சந்தியாஅங்கன்வாடி மையத்தில் நடந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கல்பாக்கம் அனுமின் நிலையம் சார்பாக கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கு நிகழ்ச்சி தொடங்கிவைத்தார். கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X