ராஜாக்கூரில் ரூ.89.75 கோடியில் 1088 அடுக்குமாடி குடியிருப்புகள்; பிரதமர் மோடி திறந்து வைத்தார் | மதுரை செய்திகள் | Dinamalar
ராஜாக்கூரில் ரூ.89.75 கோடியில் 1088 அடுக்குமாடி குடியிருப்புகள்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
05:43

மதுரை : மதுரை ராஜாக்கூரில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் ரூ.89.75 கோடியில் கட்டப்பட்டுள்ள 1088 அடுக்குமாடி குடியிருப்புகளை கோவையிலிருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.



நகரில் ஆட்சேபகரமான அரசுக்கு சொந்தமான வைகை ஆற்றுப்படுகை நீர்நிலை நிலங்களில் வசித்து வருவோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன. ஒவ்வொருஅடுக்குமாடி குடியிருப்பும் 400 சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. வசிப்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை போன்றவை இதில் உள்ளன.திறப்பு விழாவில் கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், வாரிய செயற்பொறியாளர் முனியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X