சிக்கலில் சிட்லபாக்கம் பேரூராட்சி - திடக்கழிவு மேலாண்மை பணிக்கான இடமின்றி பிரச்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
05:55

தாம்பரம் - திடக்கழிவு மேலாண்மை பணிக்கான இடமின்றி, சிட்லபாக்கம் பேரூராட்சி நிர்வாகம் தவிக்கும் நிலையில், பிரச்னைக்கு தீர்வாக, வருவாய்த் துறை சார்பில், புதிதாக இடம் தேர்வு செய்யும், பணிகள் நடந்து வருகின்றன.சிட்லபாக்கம் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், தினசரி, 10 டன் குப்பை சேகரமாகிறது. இது, 25 ஆண்டுகளாக, சிட்லபாக்கம் பெரிய ஏரியை ஒட்டி அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. ஏரி நீர் மாசடைவதற்கு, இந்த குப்பை கிடங்கு, முக்கிய காரணமாக இருந்தது. பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 25 ஆண்டுகளாக தேங்கி இருந்த குப்பை, 'பயோ மைனிங்' முறையில் பிரிக்க, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கொளத்துாருக்கு, 2019ல் எடுத்து செல்லப்பட்டன.குப்பை கொட்ட இடமின்றி, மீண்டும் ஏரி அருகே உள்ள, உரக்கிடங்கில் குப்பை, கொட்டப்பட்டு வந்தது. இதுவும், கடந்த ஆண்டு, இரண்டாவது முறையாக அகற்றப்பட்டது.அதன் பின்பும், திடக் கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள, பேரூராட்சிக்கு இடம் கிடைக்காததால், மூன்றாவது முறையாக, ஏரியை ஒட்டி மீண்டும், சில மாதங்களாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது.இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:திடக்கழிவு மேலாண்மை பணிகளை செயல்படுத்த, நிர்வாகத்திடம், ஏக்கர் நிலம் கூட இல்லை. 'இன்சினேட்டர்' இயந்திரம் இயக்குவதற்கும், அனுமதி கிடைக்காத நிலையில், வேறு வழியின்றியே குப்பை அனைத்தும், ஏரி அருகில் உள்ள, உரக்கிடங்கில் கொட்டப்படுகின்றது.மாவட்ட நிர்வாகத்திடம், இது குறித்து, சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், வருவாய்த் துறை வாயிலாக, திடக்கழிவு மேலாண்மை பணிக்கான, இடத்தை ஒதுக்கீடு செய்து தருவதாக கூறியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வருவாய் கோட்டாட்சியர், ரவிச்சந்திரன் கூறுகையில், ''சிட்லபாக்கம் மற்றும் பீர்க்கன்காரணை பேரூராட்சிகளின், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, திருவஞ்சேரியில், அரசுக்கு சொந்தமான, 5 ஏக்கர் அநாதீன நிலம் உள்ளது. அதில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தெரிவதால், நிலத்தை முழுவதும் அளக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X