சாலையில் மாட்டுத் தொழுவம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
18:31

மேடவாக்கம்:
மேடவாக்கத்தில், பிரதான சாலையை ஆக்கிரமித்து, மாட்டுத் தொழுவம் நடத்துவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. சென்னை, மேடவாக்கம் ஊராட்சியில், சிவகாமிநகர், சிவராம் அவென்யூ, சரஸ்வதிநகர், ஸ்ரீராம் அவென்யூ, விக்னேஸ்வரா நகர், கோல்டன் அவென்யூ, பெருமாள் நகர், கிருஷ்ணவேணி நகர், நல்ல தம்பி நகர் ஆகியவை உள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள், வேளச்சேரி- - தாம்பரம் சாலையை அடைய, இங்குள்ள படேல் சாலை, பிரதான வழித்தடமாக உள்ளது. அச்சாலையின் சந்திப்பில் இருபுறமும், சிலர், மாடுகளை கட்டி தொழுவமாக மாற்றியுள்ளனர்.இதனால், படேல் சாலையில் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதோடு, அவற்றின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.சாலையில் கிடக்கும் மாட்டு சாணத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து, விபத்துக்களை சந்தித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் அளித்தும், இன்றளவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, நலச்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால், அங்குள்ள அனைத்து நகர்களை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து, ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்த உள்ளதாக, நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X