ரூ.230 கோடி! கூடுவாஞ்சேரி - செட்டிபுண்ணியம் இடையே ...போக்குவரத்து நெரிசலை குறைக்க 8 வழிச்சாலையாக விரிவாக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 பிப்
2021
23:36
பதிவு செய்த நாள்
பிப் 26,2021 22:15

தாம்பரம் : சென்னை புறநகர் பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் வரையான, 13 கி.மீ., நீள, ஜி.எஸ்.டி., சாலை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.



230.69 கோடி ரூபாய் செலவிலான இந்த விரிவாக்கப் பணிகள், பூமி பூஜையுடன் துவங்கப் பட்டுள்ளன. சென்னை நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக திகழும், ஜி.எஸ்.டி., தேசிய நெடுஞ்சாலை, தென் மாவட்டங்களை, சென்னையுடன் இணைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இச்சாலையை, ஒட்டியுள்ள புறநகர் பகுதிகள், வேகமாக வளர்ந்து வருகின்றன. அகலம் குறைவுகுறிப்பாக, செங்கல்பட்டு முதல், பெருங்களத்துார் வரையிலான பகுதிகளில், குடியிருப்புகள், ஐ.டி., நிறுவனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்த நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்தும், அதிகரித்துள்ளது.



அதிகரித்து வரும் போக்கு வரத்துக்கு ஏற்ப, சாலையின் அகலம் இல்லாததால், பெருங்களத்துார், வண்டலுார் - கேளம்பாக்கம் சந்திப்பு, கூடுவாஞ்சேரி, சிங்க பெருமாள் கோவில், மறைமலை நகர், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட பகுதிகளில், தினமும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வார இறுதி நாட்களிலும், பண்டிகை, பொது விடுமுறை நாட்களிலும், சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுப்பதால், இந்த சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சென்னை புறநகர் பகுதிகளில், ஏராளமான வாகனங்கள், பல மணி நேரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.



இதற்கிடையே, சாலையில் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், புறநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சென்னை மாநகர் பகுதிகளிலும் எதிரொலிக்கிறது. இதனால், வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப, ஜி.எஸ்.டி., சாலையை அகலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை முதல் தாம்பரம் வரையிலான நான்கு வழிப்பாதை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. முதல்வர் அறிவிப்புஅதைத்தொடர்ந்து, தாம்பரத்தை அடுத்த, இரும்புலியூர் - வண்டலுார் இடையே, 20.77 கோடி ரூபாய் செலவில், எட்டு வழிச்சாலை பணி, 2020ல் முடிக்கப்பட்டது.



அடுத்த கட்டமாக, வண்டலுார் - கூடுவாஞ்சேரி இடையே, 5.3 கி.மீ., துாரத்திற்கு, 44.48 கோடி ரூபாய் செலவில், எட்டு வழிச்சாலை பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதில், 60 சதவீதம் பணி முடிந்துள்ளது. சிறுபாலங்கள், கால்வாய் கட்டும் பணி எஞ்சியுள்ளது.இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், 'ஜி.எஸ்.டி., சாலையில் எஞ்சியுள்ள பகுதிகள், எட்டு வழிச்சாலை யாக விரிவாக்கம் செய்யப்படும்' என, முதல்வர் அறிவித்திருந்தார்.அதன்படி, கூடுவாஞ்சேரி - செட்டிபுண்ணியம் இடையே, 13.3 கி.மீ., துாரத்திற்கு, 230.69 கோடி ரூபாய் செலவில், எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணி, பூமி பூஜையுடன், நேற்று முன்தினம் துவங்கியது.



பூமி பூஜையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.12 மாதங்களில் முடிக்க திட்டம்கூடுவாஞ்சேரி - செட்டிபுண்ணியம் இடையிலான, எட்டு வழிச்சாலை பணியை, மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும், தேசிய நெடுஞ்சாலை, சென்னை கோட்டம் மேற்கொள்கிறது. கூடுவாஞ்சேரி - மறைமலை நகர்; மறைமலை நகர் - சிங்கப்பெருமாள் கோவில்; சிங்கப்பெருமாள் கோவில்- செட்டிபுண்ணியம் என, மூன்று கட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதை, 12 மாதங்களில் முடிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நிதியை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியுள்ளது.



நிதி- 230.69 கோடிஒப்பந்ததார்கள் - 3 பேர்சிறுபாலங்கள் - 2 சிறிய சிறுபாலங்கள் - 35கால்வாய்- 9.5 கி.மீ., துாரம் அணுகு சாலை- 10 கி.மீ., எதிர்கால நடவடிக்கைகடந்த, 1989ல், ஜி.எஸ்.டி., சாலையை விரிவாக்கம் செய்த போது, எதிர்கால தேவை கருதி, எட்டு வழிச்சாலைக்கு ஏற்ற நிலத்தை, நெடுஞ்சாலைத் துறையினர் கையகப்படுத்தினர்.அதனால், தற்போது, நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போதிய நிலம் இருப்பதால், பணியை, திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதேநேரத்தில், இப்பணியின் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கவும், பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும், போதிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Chennai,இந்தியா
27-பிப்-202116:49:18 IST Report Abuse
Rajagopal அருமையான திட்டம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, மெட்ரோ ரயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டால், சென்னை தெற்கின் வளர்ச்சி படு சிறப்பாக இருக்கும்.
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
27-பிப்-202113:10:05 IST Report Abuse
mupaco அவசர அவசிய வேலைகள் தவிர முக்கியமாக குடும்ப மற்றும் வியாபார சந்திப்புகளுக்கு அரசு அனுமதி முறை (விசா மாதிரி ) கொண்டு வரலாம்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
27-பிப்-202112:39:20 IST Report Abuse
rajan இது 20 வருடங்கரளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். உயர் மட் சாலை மட்டுமே நிரந்தர தீர்வு. அதை முதலில் செய்யுங்கள். SP Kovi ரயில்வே மேம்பால பணி 10 வருடங்களாக முடிக்க முடியாமல் கைவிடப்பட்டுள்ளதே. அதற்கு என்னதான் தீர்வு: செங்கலபட்டு தாம்பரம் 3வது மீட்டர் கேஜ் அகற்றப்படு 15 வருடங்களாக அகஸ் பாதை மாற்றும் பணி இன்றும் முடிந்த பாடில்லை. வெப்க கேடு. ஏற்கெனவே இருந்த பாதையை மறைத்து புதிய அகல பாதை பணி என்று செய்தி வெளியிடுகிறார்கள். உருப்படாத ரயில் நிர்வாகம். 3வது பாதையினாலும் பயன் இல்லை. 4 பாதைகள் இருந்தால் மட்டுமே தடையில்லா போக்கு வரத்துக்கு உதவும். நம்ம ஊர் MPக்கள் Waste.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X