ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட்கே.எப்., கிரிக்கெட் கிளப் வெற்றி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
04:23

மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், கே.எப்., கிரிக்கெட் கிளப் அணி, 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'பி' மைதானத்தில் நடந்தது. கே.எப்., கிரிக்கெட் கிளப் அணி, கிராண்ட் டிராவிட் கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின.முதலில் விளையாடிய கே.எப்., கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 202 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கிராண்ட் டிராவிட் சி.ஏ., அணியினர், எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 40.1 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 127 ரன் எடுத்து, 75 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மாநில கூடைப்பந்து போட்டி கோவை மகளிர் அணி இரண்டாமிடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2019-20ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டி சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. சிறப்பாக விளையாடிய சென்னை அணி முதலிடம், கோவை அணி இரண்டாமிடம், நாகப்பட்டினம் அணி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன. மாவட்ட கபடி போட்டிரத்தினம் கல்லுாரி முதலிடம்கோவை மாவட்டம், போத்தனுார் பகுதி கழகம், 99வது டிவிஷன் அ.தி.மு.க., ஸ்ரீராம் நகர் கிளை சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கபடி போட்டி, அன்பு நகர் முத்துமாரியம்மன் கோவில் எதிரே மைதானத்தில் நடந்தது. 18 அணிகள் பங்கேற்றன. போட்டியின் முடிவில் ரத்தினம் கல்லுாரி அணி முதலிடம், பி.ஜெ., பிரதர்ஸ் அணி இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. * கே.வி.பி., பழனிசாமி பிரதர்ஸ், கே.வி.பி., விநாயகா பாய்ஸ் இணைந்து நடத்தும், 2ம் ஆண்டு மாநில அளவிலான போட்டி, கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீகருப்பராயன் கோவில் மைதானத்தில், நடந்தது. 62 அணிகள் பங்கேற்றன. போட்டியின் முடிவில், கோவை பாரஸ்ட் ஸ்போர்ட்ஸ் அணி முதலிடம், மேட்டுப்பாளையம் டூரிஸ்ட் பேர்டு அணி இரண்டாமிடம், கே.வி.பி., பழனிசாமி பிரதர்ஸ் அணி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. தேசிய வலுதுாக்கும் போட்டிரயில்வே அணி சாம்பியன்கோவையில் நடந்த தேசிய அளவிலான வலுதுாக்கும் போட்டியில், 117 புள்ளிகள் பெற்று ரயில்வே அணியினர், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றனர். தமிழ்நாடு வலுதுாக்கும் அசோசியேஷன் மற்றும் சுகுணா நிறுவனங்கள் சார்பில், 46வது ஆண்களுக்கான, 38வது பெண்களுக்கான தேசிய சீனியர் வலுதுாக்கும் போட்டி காளப்பட்டி ரோடு, நேருநகர் சுகுணா ஆடிட்டோரியத்தில் நடந்தது. பல்வேறு மாநிலங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில், 'பெஸ்ட் லிப்டர் மேன்' ஆக, டில்லியின் பாஸ்கர் ஷா, ரயில்வேயின் அங்ரிஜ் சிங், அறிவழகன்; 'பெஸ்ட் லிப்டர் உமன்' ஆக, தெலுங்கானாவின் ரேகா, ரயில்வேயின் ரீமா குமாரி, ரீபா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். போட்டியின் முடிவில், 117 புள்ளிகள் பெற்று ரயில்வே அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது. மஹாராஷ்டிரா அணி இரண்டாமிடம், தமிழ்நாடு மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் வெற்றி கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'லட்சுமி கார்டு குளோத்திங்' முதல் டிவிஷன் போட்டி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில். ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி, ஸ்ரீராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த ரெய்போ கிரிக்கெட் கிளப் அணி, 48.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 142 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஸ்ரீராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட், 46.2 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 144 ரன் எடுத்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மாநில தண்டால் போட்டி கோவை அக் ஷய், சதீஷ் அபாரம்கே. திவாகரின் லைப் சேன்ஞ் பிட்னஸ் ஜிம், இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சார்பில், மாநில ஓபன் 'மிஸ்டர் மசல்-2021' மற்றும் தண்டால் சாம்பியன் ஷிப் போட்டி வெள்ளலுாரில் நடந்தது.'பாடி பில்டிங்' பிரிவு ஜூனியர்களுக்கு 60, 70, +70 எடை பிரிவிலும், சீனியர்களுக்கு 55, 60, 65, 70, 75, +75 எடை பிரிவிலும்; தண்டால் பிரிவில், 30, 40, 50, 60, 65, 70, +70 எடை பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. * தண்டால் போட்டி, 40 கிலோ எடை பிரிவில், கோவையின் அக் ஷய், கிருத்திக்; 50 கிலோ எடை பிரிவில், விருதுநகரின் மாதவன், புதுக்கோட்டை பிரபு ஆகியோர் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர். * 'பாடி பில்டிங்' போட்டி, 70 கிலோ எடை பிரிவில், திருவாளூரின் காட்வின் ஆரோக்கிய தாஸ், கோவையின் கருப்புச்சாமி; 75 கிலோ எடை பிரிவில், கோவையின் சதீஷ், தர்மதுரை ஆகியோர் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கோவையை சேர்ந்த சதீஷ் தட்டி சென்றார்.கிரிக்கெட் போட்டி எம்.டி.எப்., அணி முதலிடம் ஆலயம் ஸ்போர்ட்ஸ் கிளப், ஆர்.கே. பிட்னஸ் வில்லேஜ் ஜிம் மற்றும் ஒய்.எல்.டி.ஜி., கிரிக்கெட் கிளப் சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, வடவள்ளியில் நடத்தப்பட்டது. ஐந்து ஓவர் அடிப்படையில் நடந்த இப்போட்டியில், 73 அணிகள் பங்கேற்றன. போட்டியின் முடிவில், எம்.டி.எப்., 'ஏ' அணி முதலிடம், கே.பி., கிரிக்கெட் கிளப் அணி இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன. மாநில அளவிலான கபடி போட்டி கோவை வீராங்கனைகள் இரண்டாமிடம்தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியேஷன் சார்பில், 47வது மாநில அளவில் பெண்களுக்கான ஜூனியர் சாம்பியன் ஷிப் கபடி போட்டி, சென்னையில் நடந்தது. இதில், 38 அணிகள் பங்கேற்றன. பரபரப்பான இறுதிப்போட்டியில், ஈரோடு அணி, 32- 16 என்ற புள்ளி கணக்கில், கோவை அணியை வென்றது. போட்டியின் முடிவில் ஈரோடு அணி முதலிடம், கோவை இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X