கடலுார் : அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் இரண்டாம் நாள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று, மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே ஓடின.
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு, 14வது ஊதிய ஒப்பந்தத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் போராட்டத்தையொட்டி நேற்று முன்தினம் மாவட்டத்தில் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இரண்டாம் நாளான நேற்றும் அதே நிலையே நீடித்தது.
கிராம பகுதிகளுக்கு முழுவதுமாக பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தொழிலாளர்கள், அந்தந்த பணிமனைகளின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுார் மண்டல அலுவலக பணிமனை முன் தொ.மு.ச., தலைவர் பழனிவேல் தலைமையில் நாமம் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திட்டக்குடிதிட்டக்குடி பணிமனை முன் தொ.மு.ச., சின்னதுரை, பெருமாள், சி.ஐ.டி.யூ., மணிகண்டன், முருகன், கோவிந்தராஜ், ஏ.ஏ.எல்.எல்.எப்., கடவுள், காமராஜ், டி.எம்.டி.எஸ்., சக்திவேல் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மதியம் கணேசன் எம்.எல்.ஏ., தொழிலாளர்களை நேரில் சந்தித்து, தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பிரச்னைகள் சரிசெய்யப்படும் என உறுதி அளித்தார்.
வடலுார்
வடலுார் பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொ.மு.ச., அமைப்புச் செயலாளர் பால விநாயகம் தலைமை தாங்கினார். ஓட்டுநர் செயலாளர் செல்வகுமார், சி.ஐ.டி.யூ., தலைவர் உத்திராபதி, துணைத் தலைவர் முத்துக்குமரன், செயலாளர் முருகன், பி.டி.எஸ்., தலைவர் ராஜன் தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம்அரசு பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொ.மு.ச., கடலுார் மண்டல பொதுச் செயலாளர் தங்க ஆனந்தன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விஸ்வநாதன், மற்றும் அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.