புவனகிரியில் பூவராக சுவாமி மண்டகப்படி கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடுகள் தீவிரம் | கடலூர் செய்திகள் | Dinamalar
புவனகிரியில் பூவராக சுவாமி மண்டகப்படி கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
05:12

புவனகிரி : புவனகிரியில் மாசிமகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுடன் செய்து வருகின்றனர்.



ஸ்ரீமுஷ்ணம், பூவராக சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகம் அன்று, கடலாடி உற்சவம் நடைபெறும். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கிள்ளை முழுக்குத்துறை உப்பனாற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது, முஸ்லிம்கள் சார்பில் தைக்காலில் சுவாமிக்கு வரவேற்பு அளிப்பதும் வழக்கம்.தீர்த்தவாரி முடிந்து, வீதியுலாவாக வந்து, புவனகிரி கடைவீதியில் ஆரிய வைசிய மண்டபத்தில், மண்டகப்படியாகி பூவராக சுவாமி எழுந்தருளி அருள்பாலிப்பார்.மண்டகப்படி நிகழ்ச்சிக்கு விழாக் குழுவினர் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X