போலீசை மிரட்டிய 2 பேர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
போலீசை மிரட்டிய 2 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
05:13

கடலுார் : போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.



கடலுார் துறைமுகம், போலீஸ்காரர் மணிகண்டன். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிங்காரத்தோப்பு பாலம் அருகே கூட்டமாக நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிரஞ்சீவி, 27; பஞ்சநாதன் மகன் சூர்யா, 25; பழனிவேல் மகன் கோபு, 26; ஆகியோரை கலைந்து போகும்படி கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த மூவரும், போலீஸ்காரர் மணிகண்டனை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து சிரஞ்சீவி, கோபுவை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X