விருத்தாசலம் : விருத்தாசலத்தில், தமிழ்நாடு கிராம வங்கி இடமாற்றத்துடன் நேற்று திறப்பு விழா நடந்தது.
விருத்தாசலம் காந்தி நகரில், தமிழ்நாடு கிராம வங்கி கிளை செயல்பட்டு வந்தது. வாடிக்கையாளர்கள் வசதிக்கு ஏற்ப, கடலுார் மெயின்ரோட்டில், நேற்று இடமாற்றம் செய்யப்பட்டு, திறப்பு விழா நடந்தது. கிளை மேலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார மேலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பி.டி.ஓ., பிரேமா புதிய கிளையைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.விழாவில், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அடரி கிளை மேலாளர் மோகன்ராஜ், காசாளர் சிவசங்கர், இளவரசி செய்திருந்தனர்.