இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி | கடலூர் செய்திகள் | Dinamalar
இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
05:13

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுாரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 37; இவரது மனைவி சாவித்திரி, 32; இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவருக்கும் 7 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனர்.கார்த்திகேயன் மனநிலை பாதிக்கப்பட்டதால் டாக்டரிடம் சிகிச்சை பெற்று வீட்டில் தனக்காக துாக்க மாத்திரை வாங்கி வைத்திருந்தார்.



இந்நிலையில், கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் இரவு தகராறு செய்து விட்டு கார்த்திகேயன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.இதனால், மனமுடைந்த சாவித்திரி தனது குழந்தைகளுக்கு கணவர் வாங்கி வைத்திருந்த துாக்க மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவரும் போட்டுக் கொண்டார்.



நேற்று காலை வெகுநேரமாகியும் சாவித்திரியும், குழந்தைகளும் எழாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் திறந்து பார்த்த போது மூவரும் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.சாவித்திரியை எழுப்பி கேட்டதற்கு தற்கொலை செய்து கொள்ள துாக்க மாத்திரைகளை போட்டுக் கொண்டு, குழந்தைகளுக்கும் கொடுத்ததாக தெரிவித்தார்.உடன், மூவரையும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X