எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
05:14

கடலுார் : தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், கடலுார் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.



தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. அதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.அதனைத் தொடர்ந்து, கடலுார் பீச்ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் முன்னிலையில் தேர்தல் தாசில்தார் பலராமன் தலைமையிலான அதிகாரிகள் மாலை 6:30 மணியளவில் சீல் வைத்தனர். துணை தாசில்தார் வெற்றிச்செல்வன், வருவாய் இளநிலை ஆய்வாளர் ரவி உடனிருந்தனர்.



மூன்றாவது பூட்டு




கடலுார் எம்.எல்.ஏ., அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாகவே திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2011ல் சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதிமுறையின்போது சீல் வைத்தனர். அதன்பிறகு 5 ஆண்டுகளாக எம்.எல்.ஏ., அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு வரவில்லை. சீல் வைத்த பூட்டு அப்படியே இருந்தது. அதைத் தொடர்ந்து 2016 சட்டசபை தேர்தலின் போது திறக்காத அலுவலகத்திற்கு மற்றுமொரு சீல் வைக்கப்பட்டது.



மறுபடியும் எம்.எல்.ஏ., அலுவலகம் 5 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த நிலையில் சீல் வைத்த 2 பூட்டுக்கள் அப்படியே இருந்தன.இந்நிலையில் நேற்று திறக்கப்படாத அலுவலகத்திற்கு மூன்றாவது முறையாக வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X