கடலுார் : மாசி மகோற்சவத்தையொட்டி கடலுார், சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், தேரில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
கடலுார் முதுநகர், சோனங்குப்பத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் கோவிலில், மாசி மகோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றததுடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 9ம் நாள் உற்சவமான நேற்று, திருத்தேரில் பெருமாள் லட்சுமிதேவி வீதியுலா நடந்தது.சோனங்குப்பம் கப்பல் மாலுமிகள் நேற்றைய உற்சவ ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மாசிமகமான இன்று 27ம் தேதி காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் கடற்கரையில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இரவு முத்துப்பல்லக்கில் தெப்பல் உற்சவம் நடக்கிறது.