பேரூர்:ரோடு புதுப்பிப்பு பணி இழுபறியாக நடப்பதால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நல்லுார் வயல் - சப்பாணி மடை வரை, 2 கி.மீ.,க்கு ரோடு உள்ளது. இந்த ரோட்டை, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில், ரூ.42 லட்சம் மதிப்பீட்டில், ரோடு புதுப்பிக்கும் பணி துவக்கப்பட்டது.கடந்த, ஜன.,ல் ரோடு தோண்டப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. தற்போது வரை, ரோடு முழுமை பெறாமல் உள்ளது. பொதுமக்கள், ஜல்லிக்கற்கள் வழியே கடும் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.விவசாய விளைப்பொருட்களை, வாகனங்களில் கொண்டு செல்லும்போது, நிலை தடுமாறி விழுகின்றனர். ரோடு பணியை விரைந்து முடிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.