விக்கிரவாண்டி: தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலாதவிற்கு விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற தே.மு.தி.க., மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், மாநில பொருளாளர் பிரேமலதா பங்கேற்றார்.இதற்காக, சென்னையில் இருந்து காரில் வந்த அவருக்கு, விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சூடாமணி, தொகுதி பொறுப்பாளர்கள் விழுப்புரம் செல்வராஜ், விக்கிரவாண்டி புருேஷாத்தமன், வானுார் கணபதி, செஞ்சி தயாநிதி, மயிலம் சுந்தரேசன், திண்டிவனம் வெங்கடேசன் , திருக்கோவிலுார் பாலாஜி, மாநில பொதுக்குழு ஜெயசீலன், நகர செயலாளர்கள் பாலாஜி, விழுப்புரம் மணிகண்டன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.