விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கி கூறியதாவது,இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையொட்டி, விதிமுறைகளை கண்காணிக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு மூன்று குழுக்கள் வீதம் மொத்தம் 21 பறக்கும் படைகள், ஒரு தொகுதிக்கு ஒரு குழு வீதம் 7 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும், காவல் துறை, கண்காணிப்பு குழுவினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி நடுநிலையோடு விழிப்போடு பணியாற்ற வேண்டும்.விதிமுறைகள் மீறுவோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.