விழுப்புரம் போலீஸ் சரகத்தில் 45 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரம் போலீஸ் சரகத்தில் 45 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
23:34

விழுப்புரம்: விழுப்புரம் காவல் சரகத்தில், 45 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள், பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, விழுப்புரம் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 45 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி, கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் அமுதா, கண்ட மங்கலத்திற்கும், பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி - கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவுக்கும், விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு ராதிகா - பண்ருட்டி மகளிர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா - கள்ளக்குறிச்சி டி.சி.ஆர்.பி., பிரிவுக்கும், விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி., பாண்டியன் பிறப்பித்துள்ளார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X