செங்கல்பட்டு : தனியார் கார் கம்பெனியில், கார் திருடிய ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டியில், புதிய கார்கள் பரிசோதனை செய்யும், தனியார் கம்பெனி உள்ளது.
இங்கு, வெளி மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கார்களும், சோதனைக்காக வரும். இந்த கார்களை, கம்பெனியின் டெஸ்ட் ஓட்டுனர்கள் ஓட்டி பார்ப்பது வழக்கம்.இதே நிறுவனத்தில், செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் இளங்கோ, 40, என்பவர், டெஸ்ட் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த ஆண்டு, செப்., 17ல், புதிய பதிவு எண் இல்லாத 'ஸ்கார்பியோ' காரை, சோதனைக்காக எடுத்துச் சென்றார். அதன் பின் திரும்பவில்லை.
இதையடுத்து, 10.26 லட்சம் ரூபாய் மதிப்பு கார் திருடப்பட்டது குறித்து, நிறுவன மேலாளர் தியாகராஜன் புகார் அளித்தார்.இது குறித்து விசாரித்த வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், காரை திருடிச் சென்ற இளங்கோவை, நேற்று, கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.