சோதனையில் சிக்கிய அரிசி வேன் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
சோதனையில் சிக்கிய அரிசி வேன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
00:23

காஞ்சிபுரம் : போக்குவரத்து போலீசார், வாகன சோதனையின்போது, ரேஷன் அரிசி கடத்தி சென்ற வேன் பிடிபட்டது.



காஞ்சிபுரம், இரட்டை மண்டபம் அருகே, போக்குவரத்து போலீசார், நேற்று மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஒரு வேன் வருவதை பார்த்த, போக்குவரத்து போலீசார், வழிமறித்து நிறுத்தினார். வேனில் இருந்த இருவர், வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பி ஓடி விட்டனர்.போலீசார் நடத்திய சோதனையில், 25 கிலோ எடை உடைய, 35 அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. போலீசார், அரிசி கடத்திய வேனை, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 35 மூட்டைகளை பெற்று, அரிசி கடத்தியவர் குறித்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X