சட்டசபை தேர்தல் எதிரொலி | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
சட்டசபை தேர்தல் எதிரொலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
00:25

காஞ்சிபுரம், பிப். 28-சட்ட சபை தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி நடந்து வருகிறது.



காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி விளம்பரத்திற்காக பொது இடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்து இருந்தனர். தேர்தல் காலங்களில் அவ்வாறு சுவர் விளம்பரங்களை நகராட்சி மூலம் அழிக்கப்படும். தற்போது தமிழக சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் சுவரெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.



காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள ஏழு மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் அந்தந்த சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் சுவர் விளம்பரங்களை அழித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X