கட்டுமான துறையில், கோலோச்சும் 'ஸ்டார்ட் அப்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
01:37

எந்த ஒரு பொருளை வாங்கும் போது, அது சிறப்பாக இருக்க வேண்டும்; அதே சமயத்தில், விலையும் மலிவாக இருக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பு. அதுபோல கல்லுாரி, அலுவலகம், வீடு என பெரிய அளவில் கட்டும்போது, அவற்றை கட்ட வாங்க உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் மொத்த விலைக்கு கிடைத்தால் கட்டுமான செலவு குறையும். இதுவே, பலருடைய எதிர்பார்ப்பு.கட்டுமான பொருட்களை மொத்த விலைக்கு தரும் 'ஆன்லைன்' நிறுவனமான, 'இன்பிரா.மார்க்கெட்' என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி உள்ளது. இதன், தற்போதைய மார்க்கெட் மதிப்பு, ஏறத்தாழ, 7,300 கோடி ரூபாய்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,9 சதவீதம் கட்டுமான துறை பங்களிப்பதும், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தொழில், 21 லட்சத்து, 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய துறையாக இருந்தாலும், பெரும்பாலும் இது வரையறுக்கப்படாத கட்டமைப்பு துறையாக இருப்பது வருத்தமே. ஆதித்யா ஷார்தா மற்றும் சவிக் சென்குப்தா ஆகியோர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பொருட்களுக்கான 'பி2பி' ஆன்லைன் கொள்முதல் சந்தையான 'இன்ஃப்ரா.மார்க்கெட்' 2016ல், நிறுவப்பட்டது. இந்த கம்பெனி, தொழில்நுட்பத்தை மைய புள்ளியாக கொண்டுள்ளது.வாங்குவதை ஆன்லைனில் ஏற்படுத்தி, விலை நிர்ணயம் மற்றும் வெளிப்படை தன்மையை கொண்டுவருவதன் வாயிலாக, கட்டுமான துறையில் இன்ஃப்ரா.மார்க்கெட் ஒரு முக்கிய பங்கை காண விரும்பியது. பொருள்களை சரியான விலையில் கொள்முதல் செய்வது, செலவினங்களை குறைப்பது, இடைத்தரகர்களை குறைப்பது, இந்த துறையில் மிகவும் முக்கியமானது.இதை செய்ய முயன்று, இதற்காக ஒரு ஆன்லைன் சந்தையை உருவாக்கினர். அது வாங்குபவரையும், விற்பவரையும் இணைக்கும் தளமாக இருக்கிறது.தற்போது, இந்நிறுவனம், 304 வாடிக்கையாளர்கள், 289 உற்பத்தியாளர்களுடன் இணைப்பு ஏற்படுத்தி உள்ளனர். தினமும், 946 டெலிவரிகளை கையாளுகிறார்கள். தற்போது, பெரிய ஊர்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இணையதளம்: www.infra.marketசந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, மொபைல் போன் எண்: 98204-51259, இணையதளம்: www.startupandbusinessnews.com -சேதுராமன் சாத்தப்பன் -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X