பெண் துாக்கிட்டு தற்கொலை | கடலூர் செய்திகள் | Dinamalar
பெண் துாக்கிட்டு தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
03:14

விருத்தாசலம்: குடும்ப பிரச்னை காரணமாக பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விருத்தாசலம் சக்தி நகரைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி நிஷாந்தி, 23; இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு மகன்கள் உள்ளனர்.இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த நிஷாந்தி, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் சப் கலெக்டர் விசாரணை நடக்கிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X