கடலுார்: கடலுார் அருகே ஆட்டோவில் ஆடு திருடியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கடலுார் அடுத்த பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் மனைவி அம்பிகா, 35; இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் உள்ள கொட்டகையில், ஆடுகளைக் கட்டியிருந்தார்.அதிகாலை 4:00 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, 2 பேர் 5 ஆடுகளைப் பிடித்து, ஆட்டோவில் ஏற்றினர்.அம்பிகா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து, இருவரையும் பிடித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், நத்தவெளியைச் சேர்ந்த சூர்யா, 24; பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது.போலீசார் வழக்குப்பதிந்து, சூர்யா உட்பட இருவரையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.