புவனகிரி: வட்டார வேளாண் துறை சார்பில் கீரப்பாளையத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு மற்றும் உளுந்து, பயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.கீரப்பாளையம் வட்டார ஆத்மா திட்டம் சார்பில் நடந்த முகாமில் சிறுகாலுார் ஊராட்சி தலைவர் இளம்வழுதி முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் சித்ரா வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.முகாமில் காளான் வளர்ப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி நன்றி கூறினார்.முகாம் ஏற்பாடுகளை வேளாண் தொழில் நுட்ப உதவி மேலாளர்கள் சரவணன், தேவேந்திரன் செய்திருந்தனர்.