கடலுார் கடற்கரையில் மாசிமகத் திருவிழா 50க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
03:16

கடலுார் ; கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசிமகத்தையொட்டி 50க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி நடந்தது.மாசிமகத்தையொட்டி, தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் மற்றும் திருமாணிக்குழி, வண்டிப்பாளையம், வெள்ளப்பாக்கம், வரகால்பட்டு, காராமணிக்குப்பம் என சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சுவாமிகள் கொண்டு வரப்பட்டு கடலில் தீர்த்தவாரி நடந்தது. பின், பக்தர்கள் தரிசனத்திற்காக கடற்கரையில் வரிசையாக எழுந்தருளச் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.கடலுார் துறைமுகம், பச்சையாங்குப்பம் ஆகிய இடங்களிலும் மாசிமக திருவிழா நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஹெல்மெட் அலங்காரம்ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலுார் முதுநகர் சுப்பாய் தெருவில் உள்ள மேலனுார்மாரியம்மன், ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியில் அமர்ந்திருப்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்தி அமைக்கப்பட்ட அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.பரங்கிப்பேட்டைபரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை மற்றும் கிள்ளை முழுக்குத்துறை கடற்கரையில் அலங்கரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 100க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஏராளமானோர் கடலில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.சேத்தியாத்தோப்புசேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாத்துாரில் சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம் பகுதிகளில் உள்ள 60 கிராமங்களிலிருந்து ஏராளமானேர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஏராளமான சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.காட்டுமன்னார்கோவில்ஓமாம்புலியூர் கொள்ளிடம் ஆற்றில் பூங்கொடி நாயகியம்மன் சமேத பிரனவ வியாக்ரபுரீஸ்வரர் சுவாமி மற்றும் குணவாசல், ஆதனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X