கோரிக்கை! ஆலந்தூர் - ஆதம்பாக்கம் சுரங்கப்பாதை பணி புத்துயிர் பெறுமா? ஆலந்துார் மக்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 மார்
2021
06:33
பதிவு செய்த நாள்
பிப் 28,2021 23:06

ஆலந்துார்- - ஆதம்பாக்கத்தை இணைக்கும், எல்.சி.,-15 ரயில்வே சுரங்கப்பாதை திட்டம், கிடப்பில் போடப்பட்டுள்ளது. பூமி பூஜைக்குப் பின், இத்திட்டத்தில், எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், திட்டப் பணிகளை மீண்டும் துவங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



கோரிக்கை : சென்னை, மவுன்ட் - கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், ஆலந்துார்- - ஆதம்பாக்கம் இடையே, எல்.சி.,15 ரயில்வே கேட் ஒன்று இருந்தது.இந்த ரயில்வே கேட்டின் இருபுறமும், பள்ளிகள் அதிகம் உள்ளன. ஆலந்துாரில், வர்த்தக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட் போன்றவை அமைந்து உள்ளன. இதனால், குறிப்பிட்ட ரயில்வே கேட்டை, அப்பகுதியை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர், தினமும் பயன்படுத்தி வந்தனர். அவசர கதியில், மக்கள் ரயில்வே கேட்டை கடப்பது அதிகரித்ததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நிகழ்ந்தன.



இதனை கருத்தில் கொண்டு, சென்னை புறநகரில் உள்ள, ரயில்வே கேட்டுகள் அகற்றப் பட்டன.அந்த வகையில், ஆலந்துார் நிதிப் பள்ளி அருகில் இருந்த, எல்.சி., -15 எனும் ரயில்வே கேட், 2002ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.இது, அப்பகுதிவாசிகளுக்கு, பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. சட்டவிரோத முறையில், ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற பொதுமக்களின் செயலால், விபத்துகள் ஏற்பட்டன.இதையடுத்து, மூடப்பட்ட, எல்.சி-., 15 பகுதி யில், சுரங்கப்பாலம் அமைக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு, அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



ஒப்பந்தம் : அதன்பலனாக, சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 2011ம் ஆண்டு, சுரங்கப் பாதை அமைக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சுரங்கப்பாதை, ஐந்து கோடி ரூபாய் நிதியில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், ரயில்வே பங்காக, 2.91 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.அடுத்ததாக, சுரங்கப்பாதை திட்டத்திற்கான, ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். இதையடுத்து, 2013ம் ஆண்டு, இரு துறைகளின் சார்பில், பொதுமக்களை அழைத்து, பிரமாண்ட பூமி பூஜையும் போடப்பட்டது.அதன் பின், அத்திட்டம் குறித்த எந்த தகவலும் இன்றி, அப்படியே கிடப்பில் போடப்பட்டது.



இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் கடக்கும் வகையில், நடை மேம்பாலம் அமைக்க, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகளும் துவங்கப்படவில்லை. சுரங்கப்பாதையும் அமைக்காமல், மேம்பாலமும் அமைக்காமல், பணிகள் அனைத்தும், ஆரம்பகட்ட ஆய்வு நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே, பூமி பூஜையுடன் கைவிடப்பட்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணியை, மீண்டும் துவங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X