ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் டி.டி.மெயின் ரோடு தெய்வம்மாள் தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து 63, இவர் சில நாட்களாக வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இவரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 2 பவுன் தங்க செயின், 10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.