சிக்கல் : பா.ஜ.,வை நம்பி எந்த பயனும் இல்லை. தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு மதம் கிடையாது ஆனால் ஜாதி உண்டு. யாரிடமும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவர் எஸ்.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
அவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, சிக்கல் சிறைக்குளம், வாலிநோக்கம், கொத்தங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.
அவர் கூறியதாவது:தேவேந்திரகுல வேளாளர் அடங்கிய 7 உட்பிரிவை உள்ளடக்கிய எஸ்.சி., பட்டியல் இனத்தில்இருந்து முழுவதுமாக வெளியேற்றி பி.சி., என்ற அந்தஸ்தை கொடுக்க வேண்டும். தேவேந்திர குல வேளாள மக்கள் அதிகமாக வாழும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்துார் தொகுதியில் நானும், பேரவையினர் ராமநாதபுரம் தொகுதியிலும், திருவாடானை தொகுதியிலும் போட்டியிட உள்ளோம்.பரமக்குடி எஸ்.சி., தொகுதியில் இருந்து போட்டியிடவில்லை.
எங்களை தலித் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் கூறுவதை எப்போதும் ஏற்க மாட்டோம். தேவேந்திரகுல வேளாளர் உட்பிரிவுகளை ஒன்றிணைத்த இனங்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து வெளியேற்றி தனி புதிய பட்டியல் இனமாக அறிவிக்க அரசு முன்வர வேண்டும்.பா.ஜ.,வை நம்பி எந்த பயனும் இல்லை. தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு மதம் கிடையாது ஆனால் ஜாதி உண்டு.
எங்களது கொள்கைகளை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டு வெற்றி பெறுவோம். யாரிடமும் கூட்டணி குறித்து பேசவில்லை ,என்றார்.மாவட்ட பொருளாளர்செல்லத்துரை கடலாடி ஒன்றிய செயலாளர் ஜெயேந்திர பாண்டியன், மாநில பொதுச்செயலாளர்மார்ஸ்ஸின், மாநில பொருளாளர் ஜெகதீஷ் பாண்டியன், மாவட்ட செயலாளர் மருத குமார் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.