சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சின்ன நற்குணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 48. இவரது மனைவி உஷாராணி. இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார்.
ரமேஷ் மதுவிற்கு அடிமையானதால் உஷாராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு, முதனையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மன உலைச்சலில் இருந்த ரமேஷ் நேற்று வீட்டில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.