அனுமதியின்றி கூட்டம் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு | கடலூர் செய்திகள் | Dinamalar
அனுமதியின்றி கூட்டம் அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 மார்
2021
06:11

கடலுார் : கடலுார் முதுநகரில் அனுமதி பெறாமல் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக, அ.தி.மு.க., நகர துணை செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று, கடலுார் முதுநகர் பென்ஷனர் லைன் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் அனுமதியின்றி அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையர் ராமூர்த்தி கொடுத்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார், அ.தி.மு.க., நகர துணை செயலாளர் கந்தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X