சிதம்பரம் : சிதம்பரத்தில் போதையில் சினிமா தியேட்டர் ஊழியரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே புவனகிரி, தென் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். சிதம்பரம் தியேட்டர் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 27ம் தேதி இரவு, தியேட்டரில் பணியில் இருந்தபோது, சிதம்பரம், சிங்காரத்தோப்பு சிங்காரகண்ணன் மகன் அருண்குமார் 27, வைப்புச் சாவடி சேட்டு மகன் சந்தோஷ் குமார் 25, ஆகியோர் மதுபோதையில் வந்துள்ளனர்.அதற்கு ஆனந்தராஜ் தியேட்டருக்குள் குடித்துவிட்டு வரக்கூடாது என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அருண்குமார், சந்தோஷ்குமார் அவர்களின் நண்பர்கள் சிங்காரத்தோப்பு ஹரி ஹரன் 23, குணா 19, அஜித்குமார் 26, விக்ரம் 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஆனந்தராஜை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து, அருண்குமார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேரையும் கைது செய்தனர்.