இந்து மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் ; தடுத்து நிறுத்திய அதிகாரிகள் | கடலூர் செய்திகள் | Dinamalar
இந்து மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் ; தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 மார்
2021
07:12

சிதம்பரம் : சிதம்பரத்தில் இந்து முன்னேற்ற கழக பொறுப்பாளர் அறிமுகக் கூட்டத்தை சப் கலெக்டர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் இந்து மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.



நகர அமைப்பாளர் சசிக்குமார் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ், நகர தலைவர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.அப்போது, சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன், டி.எஸ்.பி., லாமேக் மற்றும் போலீசார் அங்கு சென்று, தேர்தல் விதிமுறை உள்ளதால் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறி, நிறுத்த உத்தரவிட்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் வெறியேற்றினர்.மாநில தலைவர் கோபிநாத் கூறுகையில், காவல் துறையில் அனுமதி பெற்றுதான் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. யார் தடுத்தாலும் சிதம்பரத்தில் இந்துக்களின் ஒற்றுகையை சீர்குலைக்க முடியாது. விரைவில் அனைவரும் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும்' என்றார்.கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை, போலீஸ் அனுமதியோடு அழைத்து வந்து, அவர்களுக்கு ஏற்பாடு செய்த உணவு பரிமாறப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X